சனி, 29 ஆகஸ்ட், 2020

வேலைக்கு வந்த இடத்தில் இளம் பட்டதாரிகள் ஏமாற்றம், சொந்த ஊருக்கு கால்நடை பயணம்

0



ஈரோடு மாவட்டத்தில் பெருந்துறையில் இருக்கும் தொழிற் பட்டறையில் வேலை வாங்கி தருவதாக கூறி, புரோக்கர் ஒருவர் தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்த 11 பட்டதாரி இளைஞர்களை பிரபலமான சாயப்பட்டறை நிறுவனத்திற்கு மகிழ்வுந்து மூலம் அழைத்து வரப்பட்டார்கள். உலகப் பரவலின் குரானா வைரஸ் தொற்று பரவிவரும் நிலையில் வாழ்வாதாரத்தை இழந்து நிற்கும் படித்த இளைஞர்களை நோக்கி ஒப்பந்ததாரர்கள் அதிக சம்பளம் தருவதாக கூறிய நிலையில் படித்த இளைஞர்களும் தான் படித்த வேலைக்கு நல்ல சம்பளம் கிடைக்கும் என்ற ஆசையில் ஊர்விட்டு ஊர் அழைத்து வரப்பட்டார்கள். நிறுவனத்தில் என்ன வேலை செய்யப் போகிறோம் என்று கூட அறியாமல் இரண்டு நாட்களாக தங்க வைக்கப்பட்டனர்.

புரோக்கர் சொன்ன சம்பளம் வேண்டும் என்றும் கேட்டார்கள், அதற்கு அந்த நிறுவனம் நாங்கள் இவ்வளவுதான் சம்பளம் தருவோம் இஷ்டம் இருந்தால் வேலை செய்யுங்கள் இல்லையென்றால் வெளியேறுங்கள் என்றார்கள். இதனைத்தொடர்ந்து அவர்கள் நிறுவனத்தில் இருந்து வெளியேறி இன்று காலை சாலையோரமாக சொந்த ஊருக்கே திரும்பி நடந்து சென்று கொண்டிருந்தார்கள் . இதனை பார்த்த விழுதுகள் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் கோவிந்தராஜ் அவர்களுக்கு உதவினார்.அவர்களை அந்த வழியாக வந்த சரக்கு வாகனத்தில் ஏற்றி அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைத்தார். அந்த இளைஞர்கள் விழுதுகள் அமைப்புக்கு நன்றி தெரிவித்தார்கள். 

இளைஞர்களின் பெயர் பின்வருமாறு,தமிழ்ச்செல்வன்,சூர்யா,குப்பன்.ஆர்,கௌதம்.எம்,கார்த்தி.ஏகௌதம்.டி,சக்திவேல்.எஸ்,அஜித் குமார்.ஆர்,விஜய்.வி,துரை.கே,சிவா.கே


Author Image
பதிவிட்டவர்: Govindaraj V

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக