சனி, 29 ஆகஸ்ட், 2020

ஊரடங்கு பாதிப்பு: மாதம் ரூபாய் 6000 பணம் உதவியாக வழங்க கோரி நாடு தழுவிய கையெழுத்துப் பிரச்சாரம்

0


மார்ச் மாதத்திலிருந்து தொடரும் ஊரடங்கு காரணமாக ஒரு அசாதாரணமாக பொருளாதாரச் சூழல் உருவாகியிருக்கிறது. புலம்பெயரும் தொழிலாளர்கள், அமைப்புசாரா தொழிலாளர்கள், தெருவோர வியாபாரிகள்,சுயதொழில் செய்பவர்கள் என அனைத்து தரப்பினரும் வேலை இழந்து வருவாய் இன்றி தவித்து வருகின்றனர்.

இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் நடத்திய கணக்கெடுப்பில் ஏப்ரல் மாதத்தில் 12.2 கோடி பேர் வேலை இழந்து உள்ளதாக தெரியவந்துள்ளது.தொடர்ந்து நான்கு மாதங்களுக்கும் மேல் வருவாய் இன்றி குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளான உணவு பொருட்கள் மருத்துவம் வீட்டு வாடகை போன்ற செலவினங்களை சமாளிக்க முடியாமல் திணறி வருகிறார்கள்.

இச்சூழலை சமாளிக்க அதிக வட்டிக்கு கடன் வாங்கி வருகிறார்கள் இதே நிலை தொடர்ந்தால் பட்டினி சாவுகள் அதிகரிக்கும் சூழல் உருவாகும்.மேலும் இதன் விளைவாக பேரிடர் க்கு பின்பு மனித கடத்தல் கொத்தடிமை தொழிலாளர் முறை குழந்தை திருமணம் குழந்தை தொழிலாளர் முறை போன்றவை அறிவித்துள்ளது பெண்கள் மற்றும் குழந்தைகள் பெரும் அளவில் பாதிப்புக்குள்ளாவார்கள். 

மேலும் மற்ற நாடுகளில் வேலை வாய்ப்பை இழந்த தொழிலாளர்களுக்கு நேரடியாக அவர்களுக்கு பண உதவி வழங்கப்படுகிறது. எனவே அரசு இதேபோல் நேரடியாக வேலை இழந்த தொழிலாளர்களுக்கு உதவுமென நோக்கத்தில் இந்தக் கையெழுத்து பிரச்சாரம் நடத்தப்படுகிறது. 

Source From: Vizhuthugal Amaippu. 

Author Image
பதிவிட்டவர்: Govindaraj V

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக