புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு மனவளப் பயிற்சி- விழுதுகள் நிறுவனம்.
சமகாலத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். ஏனென்றால் உலகளாவிய குரானா வைரஸ் அதன் காரணமாகும்.
வருமானம் இல்லாமை, கொரோனா பயம் போன்ற காரணங்களால் வெளிமாநில தொழிலாளர்கள் உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பெரும் பாதிப்புக்கு உள்ளாக்கப்பட்டனர்.
திருப்பூர் மாவட்டத்தில் வசிக்கும் வெளிமாநில தொழிலாளர்களில் பலர் வேலையை இழந்து உண்ணும் உணவிற்கு வழியில்லாமல் தவித்து வந்தனர்.
எனவே சோர்ந்துபோன அவர்களுக்கு மன தைரியத்தை வரவழைக்கும் வகையில் விழுதுகள் நிறுவனம் அவர்களுக்கு அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை வழங்கி அவர்களுக்கான வாழ்வாதாரத்துக்கு துணை நின்றது.
அத்துடன் அவர்கள் மனவலிமையைப் பெற தேவையான விழிப்புணர்வு பயிற்சியையும் ஏற்படுத்தித் தந்தது. இதில் புலம் பெயர்ந்த தொழிலாளர்களுக்கான உளவியல் ரீதியான பிரச்சனைகளுக்கு தீர்வு மற்றும் அதிலிருந்து விடுபட உதவும் வகையில் விழிப்புணர்வு ஆலோசனைகள் வழங்கப்பட்டது.
மேலும் தற்போதைய அவர்களின் நிலைமையை முழுமையாக கேட்டறிந்து அதற்கான வழி வகைப்பாடு ஆலோசனைகளையும் விழுதுகள் நிறுவனம் வழங்கியது.
தொழிலாளர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு மற்றும் சுகாதார பயிற்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்கள்
பின்வருமாறு:-
மனநல ஆலோசகர்: திருமதி ஸ்ரீ மோல் அவர்கள்.
உளவியல் ஆலோசகர்: திருமதி சந்திரா அவர்கள்.
சிறப்பு அழைப்பாளர்: திரு ராமசாமி, ஊராட்சி மன்ற தலைவர் அவர்கள்.
ஒருங்கிணைப்பாளர்: திரு: கோவிந்தராஜ் விழுதுகள் அவர்கள்,மற்றும் திரு கோகுல்நாத் அவர்கள் , விழிப்புணர்வு பயிற்சியில் கலந்துகொண்ட பயனாளிகள் நிகழ்ச்சியின் இறுதியில் விழுதுகள் அமைப்புக்கு நன்றி தெரிவித்தனர்.
