வாஷிங்டன், அமெரிக்க அதிபர் தேர்தல் வேட்பாளரை முடிவு செய்யும், 'பிரைமரி' தேர்தலில், கென்டகி மாகாணத்தில், ஹலாரி கிளிண்டனும், ஆரேகான் மாகாணத்தில், பெர்னி சாண்டர்சும் வெற்றி பெற்றனர்.
அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம், இந்த ஆண்டுடன் முடிவடைகிறது. புதிய அதிபரை தேர்ந்தெடுக்க, நவ., 8ம் தேதி தேர்தல் நடக்கிறது. இதில், இரு கட்சிகளின் சார்பில் போட்டியிட உள்ள வேட்பாளர்களை முடிவு செய்வதற்கான, பிரைமரி தேர்தல் நடந்து வருகிறது.
குடியரசு கட்சியில், அதிபர் வேட்பாளர் போட்டியில் இருந்த, 16 பேரை பின்னுக்கு தள்ளி, தொழிலதிபர் டொனால்டு டிரம்ப், உத்தேச வேட்பாளராக முன்னிலை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட, ஜனநாயக கட்சியில், ஹிலாரி கிளிண்டன் மற்றும் பெர்னி சாண்டர்ஸ் இடையே, கடும் போட்டி நிலவி வருகிறது.
இந்நிலையில், நேற்று இரண்டு மாகாணங்களில், ஜனநாயக கட்சியின் சார்பில் பிரைமரி தேர்தல்கள் நடந்தன. இதில், கென்டகி மாகாணத்தில், ஹிலாரியும், ஆரேகான் மாகாணத்தில், சாண்டர்சும் வெற்றி பெற்றனர்.
இதுகுறித்து, சமூக வலைதளமான டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள ஹிலாரி, 'கென்டகியில் வெற்றி பெற்றுள்ளோம்; ஆதரவு தந்த அனைவருக்கும் நன்றி' என, கூறியுள்ளார்.
'கடைசி ஓட்டு எண்ணப்படும் வரை, போட்டியை சந்திக்கப் போகிறேன்' என, பெர்னி சாண்டர்ஸ், ஏற்கனவே தெரிவித்து இருந்தார்.