மருத்துவ நுழைவு தேர்வு விவகாரத்தில், தமிழக அரசின் முயற்சிக்கு பலன் கிடைக்கும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில், பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மருத்துவ படிப்புகளுக்கு மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. ஆனால், நாடு முழுவதும், ஒரே மாதிரியான நுழைவுத் தேர்வு நடத்தி சேர்க்கை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மாநில அரசுகளின் கோரிக்கைகளை, உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளதால், கிராமப்புற மாணவர்கள் பாதிக்கப்படுவர் என, நாடு முழுவதும் எதிர்ப்பு வலுத்துள்ளது. இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் நட்டா, சமீபத்தில், மாநில அரசுகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக அரசு சார்பில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் பங்கேற்று, தமிழகத்தின், நிலைப்பாட்டை எடுத்துரைத்தார்.
தமிழக நிலைப்பாடு

பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை என்பது, கிராமப்புற மாணவர் நலன் கருதி எடுக்கப்பட்ட முடிவு. ஆண்டுதோறும், 60 சதவீதத்திற்கும் மேல், கிராமப்புற மாணவர்கள் பயன் பெறுகின்றனர்
இந்திய தொழில்நுட்ப நிறுவனமான, ஐ.ஐ.டி., போன்ற உயர் படிப்புக்கான, ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வுகளில், சி.பி.எஸ்.சி., மாணவர்களே அதிகம் வெற்றி பெற்றுள்ளனர்
உச்ச நீதிமன்ற உத்தரவு, தமிழக அரசின் உரிமையை பறிப்பதோடு, பல குழப்பங்களை ஏற்படுத்தி உள்ளது. பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடத்த மத்திய அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு தமிழகம் வலியுறுத்தி உள்ளது.
இதுபோன்றே குஜராத், மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா, ஜம்மு - காஷ்மீர் உள்ளிட்ட மாநிலங்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. மாநில அரசுகளுடன் ஆலோசித்த பின், அமைச்சர் நட்டா, அவசர சட்டம் தொடர்பாக, சட்ட நிபுணர்களுடன் ஆலோசனை நடத்தி உள்ளார். இதனால், தமிழக அரசின் தொடர் முயற்சிக்கு பலன் கிடைக்கும் என, சுகாதாரத் துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.
தேர்வுக்கு தயாராகுங்கள்!
தமிழக அரசு, பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் சேர்க்கை நடத்த, பல முயற்சிகளை எடுத்து வருகிறது; மத்திய அரசும் ஆலோசிக்கிறது. முடிவுகள் சாதகமாக இருந்தால் வரவேற்போம்.
இதை நம்பி, மாணவர்கள் நுழைவுத் தேர்வுக்கு படிக்காமல் இருக்க வேண்டாம். ஜூலை, 24ம் தேதி நடக்கும், இரண்டாம் கட்ட நுழைவுத் தேர்வுக்கு, தங்களை தயார்படுத்திக் கொள்வதே நல்லது.- எஸ்.இளங்கோ தமிழக தலைவர், இந்திய பொது சுகாதார சங்கம்