உலக கோப்பை தொடரில் சக வீரர்களுடன் நட்பை அதிகரிக்க, கேப்டன் தோனி புது உத்தியை கையாள்கிறார். ஒவ்வொரு போட்டி முடிந்ததும் ‘ட்ரீட்டு’ கொடுத்து அசத்துகிறார்.
உலக கோப்பை லீக் சுற்றில் இந்திய அணியின் வெற்றி தொடர்கிறது. பாகிஸ்தானுக்கு எதிரான லீக் போட்டியில் வென்றதும், ரெய்னா, அக்சர் படேலை அழைத்துக் கொண்டு அடிலெய்டில் உள்ள ஓட்டலுக்கு மதிய உணவுக்கு சென்றார் தோனி. அங்கு சூடான ‘கிரில் சிக்கனை’ அனைவரும் ஒரு பிடி பிடித்தனர்.
இரண்டாவது லீக் போட்டியில் தென் ஆப்ரிக்காவை சாய்த்த இந்திய அணி, அடுத்த இரு போட்டிகளை பெர்த் மைதானத்தில் விளையாடுகிறது. இதற்காக, இந்திய வீரர்கள் பெர்த்தின் ஹயாத் ஓட்டலில் தங்கியுள்ளனர். போட்டிகள் இல்லாத காரணத்தால், வீரர்கள் மதிய உணவுக்கு வெளியே செல்ல அனுமதி அளிக்கப்பட்டது. இம்முறை கடும் வெயிலில் துணைக் கேப்டன் விராத் கோஹ்லி, முகமது ஷமி ஆகியோரை அழைத்துக் கொண்டு விருந்துக்கு புறப்பட்டார் தோனி. இவரது இந்த அணுகுமுறை மிகவும் புதிதாக உள்ளது. இதன் காரணமாக அணியில் ஒற்றுமை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
