திங்கள், 5 டிசம்பர், 2016

ஜனவரி 1 முதல் வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் அவசியம் - ரிசர்வ் வங்கி

0
புதுடில்லி: வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் அவசியம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.

இதுகுறித்து, வங்கிகளுக்கு ஆர்.பி.ஐ., அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
வரும் ஜனவரி 1 ம் தேதி முதல் வங்கி பண பரிவர்த்தனை செய்வதற்கு ஆதார் எண் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். ஆன்லைன் பரிவர்த்தனையிலும் ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும். ஆதார் அடையாளங்களை உறுதி செய்யும் கருவிகளை வங்கிகளில் பொருத்த வேண்டும். வங்கிகள் - வாடிக்கையாளர்கள் இடையிலான கே.ஒய்.சி திட்டத்திற்கு மாற்றாக ஆதார் எண்ணை பயன்படுத்த வேண்டும்.
வாடிக்கையாளர்களின் பல்வேறு அட்டை பயன்பாடுகளுக்கு பதிலாக புதிய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 2017 ம் ஆண்டு மார்ச் மாதம் 30-ம் தேதிக்குள் ஆதார் எண்ணை முழுமை யாக வங்கி கணக்குகளுடன் இணைக்க வேண்டும்.இவ்வாறு, அதில் குறிப்படப்பட்டுள்ளது.
ரயில் டிக்கெட் சலுகைக்கு...

இதே போன்று, அடுத்த ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி முதல், ரயிலில் பயணிக்கும் மூத்த குடிமக்கள் சலுகைகள் பெறுவதற்கு ஆதார் எண் கட்டாயம் சமர்பிக்க வேண்டும் என ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக