ஞாயிறு, 7 ஆகஸ்ட், 2016

சாவித்திரி ஆற்றுக்குள் விழுந்த பஸ்சை தேடும் பணி இன்றும் தொடர்கிறது

0
மும்பை: மும்பை கோவா இடையிலான பாலம் இடிந்து விழுந்தது தெரியாமல் சென்று, சாவித்திரி ஆற்றுக்குள் விழுந்த பஸ்சை தேடும் பணி இன்றும் தொடர்கிறது. இதனிடையே, பலி எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. கடந்த செவ்வாய்க்கிழமை இரவு, சாவித்திரி ஆற்றில் கட்டப்பட்டிருந்த பாலம் இடிந்தது தெரியாமல், இரண்டு அரசு பஸ்கள் மற்றும் இரண்டு கார்கள் சென்று ஆற்றுக்குள் விழுந்தன. 38 பேர் ஆற்றில் மாயமானார்கள். அவர்களை தேடும் பணி நடந்து வருகிறது. இந்த பணி இன்றும் நடந்து வருகிறது. கடலோக காவல்படை மற்றும் கப்பற்படை உதவியுடன் தேசிய பேரிடர் மீட்பு படையினர் பஸ்சை தீவிரமாக தேடி வருகின்றனர். நவீன அல்ட்ரா ஒலி மற்றும் சோனார் ஒலி சாதனங்கள் மூலம் தேடுதல் பணி நடந்து வருகிறது.

இதனிடையே, இந்த சம்பவத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 26 ஆக அதிகரித்துள்ளது. இதில் 23 பேரது அடையாளம் காணப்பட்டுள்ளது. 10 பேர் ராஜாப்பூர் - போர்விலி பஸ்சில் பயணம் செய்தவர்கள் எனவும், 7 பேர் ஜைகாட் - மும்பை பஸ்சில் பயணம் செய்தவர்கள், மற்ற 6 பேர் காரில் பயணம் செய்தவர்கள் என தெரியவந்துள்ளது. ஆற்றில் காணாமல் போன மற்றவர்களை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அவர்களும் உயிர் பிழைத்திருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக