கூடங்குளம் 2வது அணு உலையில் அடுத்த 48 மணிநேரத்தில் மின் உற்பத்தி தொடங்கும் என அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம் அணு மின்நிலைய வளாகத்தில் உள்ள முதலாவது அணுஉலையானது, கடந்த பிப்ரவரி 22ம் தேதி முதல் 1000 மெகாவாட் மின்உற்பத்தியை செயல்படுத்தி வருகிறது.
இரண்டாவது அணுஉலைக்கான கட்டுமானப் பணிகள் நிறைவடைந்து, அதில் எரிபொருள் நிரப்பும் பணியும் நிறைவடைந்தது. அந்த அணுஉலையை செயல்படுத்துவதற்கு முன்பாக நீராவி வெளியேற்றும் சோதனை உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு சோதனைகளும் அதிகாரிகளின் மேற்பார்வையில் கடந்த சில வாரங்களாக நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், இரண்டாவது அணு இன்று முதல் செயல்பாட்டுக்கு வந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
இதுதொடர்பாக கூடங்குளம் அணுமின் நிலைய அதிகாரிகள் தெரிவிக்கையில், ''கூடங்குளம் இரண்டாவது அணு உலையில் அணுப்பிளவு தொடர்வினை ஆயத்தப்பணிகள் இன்றிரவு 7.52 மணிக்கு தொடங்கியது. அடுத்த 48 மணி நேரத்திற்குள் இந்த அணு உலையில் இருந்து மின்சாரம் உற்பத்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது'' என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.