புதுச்சேரி: புதுச்சேரி காங்., முதல்வராக முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமிக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் திமுக - காங்., கூட்டணி அமைத்து போட்டியிட்டது. 30 தொகுதிகளில் 17 இடங்களை பிடித்தது. இருப்பினும் சட்டசபை குழு தலைவராக யாரை தேர்வு செய்வது என்பதில் காங்., கட்சியில் குழப்பம் நீடித்தது. அக்கட்சியின் மாநில தலைவர் நமச்சிவாயத்தை முதல்வராக்க வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வந்தனர்.
இந்த விவகாரத்திற்கு முடிவு கட்டும் வகையில் டில்லியில் இருந்து ஷீலா தீட்ஷித். முகுல் வாஸ்னிக் ஆகியோர் மேலிட பார்வையாளர்களாக அனுப்பி வைக்கப்பட்டனர். இவர்கள் ஆலோசனைப்படி இன்று முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமியை இன்று சட்டசபை குழு தலைவராக தேர்வு செய்தனர். இவர் விரைவில் பொறுப்பேற்கவுள்ளார்.
இந்த அறிவிப்பு வெளியான சில நிமிடங்களில் நமச்சிவாயம் ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். காங்., ஆதரவாளர்களை போலீசார் லேசான தடியடி நடத்தி கலைத்தனர். இங்கு காங்., கோஷ்டி மோதல் வெளிப்படையாக வெடித்துள்ளது.