திங்கள், 30 மே, 2016

பள்ளிகளில் 5ம் வகுப்பில் இருந்து தான் மாணவர்களுக்கு தேர்வு

0
புதுடில்லி : பள்ளிகளில் 5ம் வகுப்பில் இருந்து தான் மாணவர்களுக்கு தேர்வு நடத்த வேண்டும் என மத்திய அரசுக்கு உயர்மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது. புதிய கல்வி கொள்கையை வகுப்பதற்கான வழிமுறைகளை பரிந்துரைக்கும் வகையில் முன்னாள் கேபினட் செயலாளர் சுப்பிரமணியன் தலைமையில் உயர்மட்டக்குழு ஒன்றை மத்திய அரசு அமைத்தது. இந்திய கல்வித் தரத்தை உயர்த்துவது தொடர்பாக பல்வேறு அம்சங்களை இந்த குழுவினர் ஆய்வு செய்து 200 பக்க அறிக்கையை மத்திய அரசிடம் சமர்ப்பித்து உள்ளனர். அதில், 8-ம் வகுப்பு வரை மாணவர்களை தோற்கடிக்கக்கூடாது என கல்வி உரிமைச்சட்டம் பரிந்துரைக்கிறது. இந்த கொள்கையை மறுபரிசீலனை செய்து, 4-ம் வகுப்பு வரை மாணவர்களை தோற்கடிக்கக்கூடாது என்ற வரைமுறையை உருவாக்க வேண்டும். மாணவர்களுக்கு 5-ம் வகுப்பில் இருந்து தான் தேர்வு நடத்த வேண்டும். இதில் முதல் முறை தோல்வியடையும் மாணவன் அல்லது மாணவிக்கு மேலும் 2 வாய்ப்புகள் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்டவைகள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக