மும்பை : கடந்த இரண்டரை மாதங்களில் இல்லாத அளவுக்கு ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளது. இன்றைய வர்த்தகநேர துவக்கத்தில்(மே 24ம் தேதி, காலை 9.15மணி) அந்நிய செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 18 காசுகள் சரிந்து ரூ.67.67-ஆக இருந்தது.
பங்குச்சந்தைகளில் காணப்படும் ஏற்ற, இறக்கத்தாலும், வங்கிகள் மற்றும் இறக்குமதியாளர்களுக்கு டாலருக்கான தேவை அதிகரித்திருப்பதாலும் ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதாக சந்தை வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். முன்னதாக நேற்று ரூபாயின் மதிப்பு 5 காசுகள் சரிந்து ரூ.67.49-ஆக இருந்தது.