டோக்கியோ,:நவீன வங்கி கொள்ளையாக, ஜப்பானில் உள்ள, 1,400 ஏ.டி.எம்.,களில், ஒரே நேரத்தில், 100 பேர் சேர்ந்து, 86 கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளனர்.
ஜப்பானில், 7 - 11 என்ற அமைப்பின் ஏ.டி.எம்.,களில், வெளிநாட்டு கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை எடுக்க முடியும்.இதை சரியாக பயன்படுத்திய ஒரு கும்பல், தென் ஆப்ரிக்க நாட்டின் ஸ்டாண்டர்ட் வங்கியின் கிரெடிட் கார்டு தகவல்களை திருடியுள்ளது. பின், போலி கிரெடிட் கார்டுகள் தயாரித்துஉள்ளது.ஜப்பானில், கடந்த, 15ம் தேதி அதிகாலை, 5:00 மணியில் இருந்து, 7- 11 நிறுவனத்துக்கு சொந்தமான, 1,400 ஏ.டி.எம்.,களில், போலி கிரெடிட் கார்டு மூலம் பணம் எடுக்கப்பட்டுள்ளது.மூன்று மணி நேரத்துக்குள், 100 பேர் இணைந்து, இந்த கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். ஒரு ஏ.டி.எம்.,ல், ஒரு நபர் அதிக பட்சம், 61 ஆயிரம் ரூபாய் மட்டுமே எடுக்க முடியும். அவ்வாறு இந்த 100 பேரும் சேர்த்து, மொத்தம், 86 கோடி ரூபாயை கொள்ளையடித்துள்ளனர். இதையடுத்து, தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த ஸ்டாண்டர்ட் வங்கி, தான் வழங்கிய அனைத்து கிரெடிட் கார்டுகளையும் முடக்கியுள்ளது. ஆனால் இந்தக் கொள்ளையால், தன் வாடிக்கையாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று, அந்த வங்கி கூறியுள்ளது. இந்தக் கொள்ளை நடந்து, 10 நாட்களாகியும், இதுவரை யாரும் சிக்கவில்லை.