22 ஏப்ரல் 2016 கடைசியாக தரவேற்றப்பட்டது 16:21 ஜிஎம்டி
சுமார் நூற்றி எழுபது நாடுகள் உலகின் பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான விரிவானதொரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.புவியை வெப்பமடையச் செய்யும் வாயுக்களைக் கட்டுப்படுத்துவதற்கான இந்த ஒப்பந்தம் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் பாரிஸில் உருவாக்கப்பட்டு இன்று நியூயார்கில் கையெழுத்திடப்பட்டது. புவி வெப்பமடைவதால் கடுமையாக பாதிக்கப்பட்ட ஆப்ரிக்காவின் சாட் ஏரியின் பரப்பளவு கடந்த ஐம்பது ஆண்டுகளில் தொண்ணூறு சதவீதம் சுருங்கிவிட்டது.
ஒருகாலத்தில் உள்நாட்டுக்கடலாக வர்ணிக்கப்பட்ட சாட் ஏரி இன்று வெறும் குட்டைகளின் தொகுப்பாக சுருங்கிவிட்டது. சாட் , நிஜர், நைஜீரியா, கெமரூன் ஆகிய நான்கு நாடுகளுக்கு மத்தியில் அமைந்திருக்கும் சாட் ஏரி சஹெலில் இருந்த மிகப்பெரிய நீர்த்தேக்கம் இந்த சாட் ஏரி.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர் ருவாண்டா நாட்டின் அளவுக்கு இந்த சாட் ஏரி பரந்துவிரிந்திருந்தது. அதில் வெறும் பத்துசதவீதமே இன்று எஞ்சியிருக்கிறது. ஆனால் கடந்த பத்து ஆண்டுகளில் இந்த சாட் ஏரியை நம்பியிருப்பவர்களின் எண்ணிக்கை இரண்டுமடங்காக மூன்று கோடியாக அதிகரித்திருக்கிறது.
வற்றிப்போன சாட் ஏரியில் மீன்பிடி சாத்தியமில்லை என்பதால் அங்கே விவசாயம் முன்னெடுக்கப்படுகிறது. சாட் ஏரியையொட்டிய பகுதியில் விவசாயமே தற்போது இயல்பாகிவிட்டது. ஆனால் நீர் இருக்கும்வரை மட்டுமே இங்கே பயிர்செய்ய முடியும்.
எஞ்சியிருப்பதோ கொஞ்சம் தண்ணீர் என்பதால் இந்த விவசாயம் எத்தனை நாளைக்குத் தாக்குப்பிடிக்கும் என்பதே இந்த பகுதி மக்களின் கவலையாக இருக்கிறது.

நன்றி பி.பி.சி