தும்கூர் மாவட்ட தலைநகர் பகுதிக்கு 8 கி.மீ. தொலைவில் இருப்பது கைதாளா. இங்கு ஜகணாச்சாரி என்ற சிற்பி பிறந்து பல்வேறு சிற்பங்களை உருவாக்கியுள்ளார். இதில் ஸ்ரீ சென்னகேசவர் சிலை மிக நேர்த்தியானது. கலைநுட்பம் மிகுந்தது.
இந்த சிற்பம் இருந்த இடத்தை சிலர் முறைகேடாக அபகரித்து உள்ளனர். அது விவாதத்திற்கு ஏற்றதாக மாறியுள்ளது.
பிரசித்திப் பெற்ற கோயில்களின் வரலாற்றில் கைதாளா கேசவா கோயில் அதிமுக்கியத்துவம் பெற்றதாக கருதப்படுகிறது.
சிற்ப கலைகள் மிளிரும் இந்த பகுதியில் சிதைக்கப்பட்டுள்ளதை மீண்டும் புனரமைக்கும் பணியில் முயற்சிகள் நடந்து வருகிறது.
சிற்பி ஜெகனாச்சாரியாவின் புதல்வர் டங்கனாச்சாரி வளர்ந்து பெரியவனாக ஆனப்பிறகு சுயமாக தந்தையின் வழியில் சென்னகேசவா கோயிலை ஏற்படுத்தியுள்ளார்.
சிலை உருவாக்குவதில் தந்தை மகனுக்கும் ஏற்பட்டிருந்த போட்டி தகராறில் தந்தை தனது கையை வெட்டிக் கொண்டு ஒரே இரவில் சென்னகேசவரின் சிலையை உருவாக்கியதால் கைதாலா என்ற பெயர் அப்பகுதிக்கு நிரந்தரமாகியது.
பெரும்பாலான கோயில் நுழை வாயில்கள் யாவும் விஜயநகர மாதிரி வடிவமைப்பில் இருக்கும் அத்தகைய நுழைவாயிலை தர்மஸ்தலா கோயிலின் நுழைவாயிலிலும் கோபுரங்களை உருவாக்கி உள்ளனர்.
அத்துடன் கர்ப்பகுடியும் கூட சிற்ப வேலைபாடுகளுக்கு இதுவே மார்க்க தரிசனமாகியது.
சென்னகேசவர் சிலை ஐந்தரை அடி உயரம் கொண்டது.
விஷ்ணுவின் தசாவதாரத்தின் சிற்ப வேலைபாடுகளும் வரலாற்று பெருமைக்குரியது.
இதனை சுற்றுலாத்துறை பாதுகாக்க வேண்டியது அவசியமாகும். ஒய்சளர் காலத்து சிற்பங்களையும் பாதுகாக்கப்பட வேண்டும்.
நன்றி: வலைத்தளம்