புதன், 20 ஏப்ரல், 2016

கேரட் அல்வா செய்வது எப்படி?

0
தேவையான பொருட்கள் :
கேரட் - 1 கிலோ
சர்க்கரை - 500 கிராம்
பால் - 200 மில்லி
நெய் - 100 கிராம்
ஊறவைத்து தோல்நீக்கப்பட்டு வெட்டப்பட்ட பாதாம் - 20 கிராம் அலங்கரிப்பதற்காக

செய்முறை :
  • கேரட்டை தோல் சீவி நன்றாக துருவி கொள்ளவும்.
  • துருவிய கேரட்டை கொடுக்கப்பட்ட பாலில் இருந்து பாதியெடுத்து 10 நிமிடங்கள் அடுப்பில் வைத்து வேக வைக்கவும்.
  • ஒரு கடாயினை சூடேற்றி, நெய் விடவும்.
  • அடுத்து அதில் வேகவைத்து கேரட், சர்க்கரை மற்றும் மீதமுள்ள பால் ஆகியவற்றை சேர்த்து அல்வா பதம் வரும்வரை கிளறவும்.
  • நன்றாக சுருண்டு அல்வா பதம் வந்ததும் பாதாம் பருப்புகளைக் கொண்டு அலங்கரித்து இறக்கவும்.
  • சுவையான கேரட் அல்வா ரெடி.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக