பார்பவர் கண்களுக்கு பச்சை பசையெல் என்று காட்சிக்கும் வளம்மிக்க கிராமமாகதான் இன்றளவும் சிங்கம்பட்டி திகழ்ந்து வருகிறது. இன்றைய சமுகத்தில் உள்ள குழந்தைகளுக்கு ராஜா என்றால் யார் என்று தெரியாது. அவர்களின் வீரம் பற்றியும் அவர்கள் சேவை பற்றியும் தெரிந்திருக்கவே வாய்ப்புகள் குறை என்றேகூறலாம்.
ராஜா என்று சொல்லும்போதே அவர்மேல் நமக்கு ஒரு தனி அபிப்ராயம் தோன்றும் அதுமட்டும் இல்லாமல் ஊர்மக்களுக்கும் அவர் மேல் நல்ல மரியாதையை வைத்திருப்பார்கள் என்பது நமக்கு நன்றாகவே தெரியும். ராஜா என்பவர் மக்களின் தேவைகளையும் குறைகளையும் தீர்த்துவைக்ககூடியவர் அதே போன்று ராஜாயுடைய பூமியில் விளையும் எல்லா பொருள்களையும் ஊர்மக்களுக்கு கொடுத்து வழங்குவது மட்டும் இல்லாமல் தன்னுடைய அரண்மனையில் வாழும் காவலர்களுக்கும் கொடுத்து மகிழ்வார் வழங்குவார் என்ற எண்ணம் அனைவர்மத்தியிலும் ஏற்படுத்தும் அதனால் மக்கள் ராஜாவை எப்போதும் மறப்பது இல்லை.
ராஜாவை இன்றும் பல்வேறு அரசியல் தலைவர்கள் அரசு அதிகாரிகள் இன்று வரையிலும் பார்த்து செல்லுகின்றனர். இதுவே ஒரு பெரியவிஷயமாக தோன்றுகிறது. சின்னகுழந்தைகள் போனால்கூட அவர்களிடம் அன்பாகபேசிவருகிறார். ராஜாவுக்கு பணிவடை செய்து கொள்ளுவதற்க்காக 15 காவாலாளிகள் இன்று வரையிலும் பணியில் அமர்த்தப்பட்டுள்ளது. இந்த பதினெந்து பேருக்கு ராஜா ஒவ்வொரு பணியை ஒதுக்கி உள்ளார். அவர்களும் சிறந்த முறையில் பணிவடை செய்துவருகிறார்கள்.
சிங்கம்பட்டி .கி.பி.1100ஆம் ஆண்டு உதயமானது. அன்று முதல் இன்று வரைக்கும் அவர்கள் சேவை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது.
பொதிகை மலையாகிய மேற்குதொடர்ச்சிமலையும், வடக்கே தாமிரபரணிநதியும் , கிழக்கே பசுமை நிறைந்த வயல்வெளிகளோடு களக்காடு கருமாண்டி அம்மன் கோவிலையும் எல்லைகளாக கொண்டது சிங்கம்பட்டி ஜமீனாகும். இந்த ஜமினுக்கு மேற்கு தொடர்ச்சிமலையில் உள்ள 80,000 ஏக்கர் நிலப்பரப்பு ஜமீனுக்கு சொந்தமாக இருந்து வந்தது என்பது ஆச்சிரியாமான ஒன்றாகும். கரையார் அருள்மிகுசொரிமுத்துயனார்திருக்கோயில் உள்பட 8 கோவில்களும் ,5 ஆயிரம் ஏக்கர்நன்செய், புன்செய்தோப்புதுரவுகளையும் உள்ளடக்கியது சிங்கம்பட்டிஜமீனாகும்.
ஜமீன்சிறப்பு:
”வான்பொய்த்தாலும்நான்பொய்யேன்” என சூளுரைக்கும் வாற்றாத ஜீவநதிகளான தாமிரபரணி, மணிமுத்தாறு மற்றும் பச்சையாறு போன்ற நதிகள் ஜமீனுக்கு சொந்தமான அமுதசுரபிக்களாக இருந்துவந்தன.
நம்பூமியில் உள்ள ஐவகை நிலங்களில் முதல் மூன்றான முல்லை , குறிஞ்சி, மருதம் ஆகிய பெருமைக்களுக்கு சொந்த பூமியும் சிங்கம்பட்டி கிராமத்திற்க்கு உண்டு. தாமிரபரணியில் உள்ளபான தீர்த்தம் என்னும் புண்ணிய தீர்த்த கட்டத்தைமையமாக கொண்டு ஜமீனுக்கு தீர்த்தபதி என்ற பட்டம் சூட்டப்பட்டது.
ராஜாவின்பிறப்பு;
1931-ஆம் ஆண்டு செப்டம்பர் திங்கள் 29-ம் நாள் தோன்றியவர் இவர் நடமாடும் பல்கலைகழகம் என்றும் அழைக்கப்படுகின்றனர். நமது மன்னர் தென்னாட்டுராஜா நல்லகுத்திசிவசுப்பிரமணிய கோமதிசங்கரஜெயதியாக முத்துசண்முகசுந்தரமுருகதாஸ் தீர்த்தாபதிமகாராஜ ஆவார்.
தனது இளமைபருவமான 3 வயதிலேயே தனது தந்தையை இழந்தார். அவர் இறந்த சிறிய காலத்திலே முருகதாஸ்தீர்த்தாபதி ஆட்சிக்காட்டில் அரியணை ஏறினார். 75 ஆண்டுகள் நிறைவுபெற்று முத்துவிழாகண்ட 80 வயதுடைய இளைஞர் இவர்.
இன்றையகாலகட்டத்திலும்ஒருஆபுர்வசிறப்பு;
நம் இந்தியாவில் இவர் மட்டுமே முடிசூடிய பெருமைக்குரிய மன்னராக இன்று வரையிலும் திகழுகிறார். இன்றளவும் காரையார்அருள்மிகுசொரிமுத்துயனார்கோவிலில் ஆடி அமாவாசை திருவிழாவில் ராஜா உடை அணிந்து பக்தர்களுக்கு ஆசிவழங்கும் நிகழ்ச்சி தமிழ்நாட்டில் திருநெல்வேலில் மட்டும்தான் என்பது மகிழ்ச்சியான தருணமாக இருந்து வருகிறது.
ராஜாவின்கல்வி;
அன்றைய ஆங்கிலேய அரசாங்கத்தின் சட்டத்திட்டங்களுக்கு உட்பட்ட ஒர் அமைப்பான செல்வர்சிறுவர்காப்புளார்நீதிமன்றத்தின் பராமரிப்பில் வளர்ந்து வரும் நிலையில் தனது இளமைக்கல்வியை பாளைங்கோட்டை புனிதஇன்னாசியார்பள்ளிலும் உயர்கல்வியை சேலம் ஏற்காடுமான்பார்ட் கல்விசாலையிலும் மேல்நிலைக்கல்வியை அன்றைய சூழ்நிலைக்கேற்ப மேல்நாட்டுநாகரீகத்தோடு முறையாக கற்கவேண்டும் என்பதற்க்காக அரசாங்கத்தின் மூலம் மாவட்ட ஆட்சித்தலைவரின் பராமரிப்பில் கீழ்த்திசைநாடான இலங்கையில் டிரினிட்டிகல்லூரியிலும் கல்விபயின்று எண்ணையும், எழுத்தையும் கண்ணெனகற்றார்.
இவர்துப்பாக்கிசுடுதல், சிலம்பம் , வர்மகலை ஆகியவற்றையும். முறையாககற்றவர். மேலும் இவர் சிறந்த பால்டான்சர், கர்நாடக இசையிலும் மிகுந்த ஈடுபாடுகொண்டவர்.
ராஜா கொடுக்கப்பட்ட விருதுகள்;
தென்பொதிகைசித்தர், இந்துசமயபாதுகாவலர், ஆன்மிகஆழமுடையமை, சித்தாந்தசிகாமணி, சிவஞானசித்தர், சித்தாந்தசிந்தாமணி, சிந்தணைசிகரம், சித்தாந்தபேறிஞர், மூதறிஞர், சிவம்பெருக்கும்செம்மலார், சித்தாந்தசிந்தனைகருவூலகச்செம்மல், வாழ்நாள் சாதனையாளர்விருது போன்ற பல விருதுகள் இவருக்கு பெருமை தேடிதந்துள்ளது.
அரண்மனை என்றாலே நமக்கு எல்லாம் ஞாபகம் வருவது முதலில் ராஜாவின் கம்பீரமான தோற்றம் அங்கு வேலை செய்யும் மனிதர்களின் உடை மற்றும் நடவடிக்கைதான் அதை என்று வரைகடைப்பிடித்துவரும் அரண்மனை என்றால் இதுதான் என்று கூட சொல்லலாம். மக்கள் மாறினாலும் இன்று வரைக்கும் மாறாமல் இருக்கும் இந்த அரண்மனையின் கலாச்சாரம் ஆகும்.
தகவல்: ந.சுப்பிரமணியன்
வள்ளியூர்