புதன், 27 ஏப்ரல், 2016

டான்செட் தேர்வு: மே 2 முதல் 17 வரை இணையத்தில் பதிவு செய்யலாம்

0
முதுநிலை பொறியியல் படிப்புகள், எம்.பி.ஏ., எம்.சி.ஏ. படிப்புகளில் சேர்வதற்கான தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வு (டான்செட்) அறிவிப்பை அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ளது.
ஜூன் 11, 12 தேதிகளில் நடைபெறும் இந்தத் தேர்வுக்கு, மே 2-ஆம் தேதி முதல் 17-ஆம் தேதி வரை www.annauniv.edutancet2016 என்ற பல்கலைக்கழக இணைய தளத்தில் மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

தமிழகத்தில் அரசு, அரசு உதவி பெறும் பொறியியல் கல்லூரிகள், கலை, அறிவியல் கல்லூரிகளில் எம்.பி.ஏ., எம்.சி.ஏ., முதுநிலை பொறியியல் படிப்புகளில் மாணவர் சேர்க்கை "டான்செட்' நுழைவுத் தேர்வு அடிப்படையில் நடத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, 2016-ஆம் ஆண்டுக்கான இந்த நுழைவுத் தேர்வு எம்.சி.ஏ., எம்.பி.ஏ. படிப்புகளுக்கு ஜூன் 11-ஆம் தேதியும், முதுநிலை பொறியியல் படிப்புகளுக்கு ஜூன்12ஆம் தேதியும் நடத்தப்பட உள்ளது. இதற்காக மே 2 முதல் 17-ஆம் தேதி வரை இணையத்தில் பதிவு செய்ய வேண்டும்.. பதிவிறக்கம் செய்ய விண்ணப்பத்தோடு, பதிவுக் கட்டணமாக ரூ. 500, எஸ்.சி., எஸ்.டி., எஸ்.சி.ஏ. பிரிவு மாணவர்களுக்கு ரூ. 250-ஐ செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களுக்கு இணையதளத்தில் அறியலாம்.
தாமதமாக நடத்தப்படும் தேர்வு: வழக்கமாக மே மாதத்திலேயே தேர்வு நடத்தப்படும். 2015-இல் இந்தத் தேர்வு மே 16,17ஆம் தேதிகளில் நடத்தப்பட்டது.
இந்த நிலையில், பொறியியல் சேர்க்கைக்கான விண்ணப்பிக்கும் முறையை நிகழாண்டு முதல் முழுவதும் ஆன்-லைனில் மாற்றியது, முதல் நாளில் விண்ணப்பம் பதிவு செய்வதில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2016ஆம் ஆண்டுக்கான டான்செட் தேர்வு ஒரு மாதம் தாமதமாக ஜூன் மாதத்தில் நடத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக