வாஷிங்டன் : இந்தியா, சீனா உள்ளிட்ட, 13 நாடுகளின் கடற்பகுதி உரிமையை மீறி, 2015ல், அமெரிக்க போர் கப்பல்கள் பயணம் செய்ததாக, தகவல் வெளியாகியுள்ளது.
சீனாவின் தென்கடல் பகுதியில் உள்ள தீவுக்கு மிக அருகில் அமெரிக்க போர்க் கப்பல், 2015ல், கடந்து சென்றது; இதற்கு சீன அரசு, கடும் கண்டனம் தெரிவித்தது. ஆனால், 'அது சர்வதேச எல்லை, சீனாவின் கடல் பகுதி இல்லை' என, அமெரிக்கா மறுப்பு தெரிவித்தது. இதேபோல், உலகம் முழுவதும், பல நாடுகள் உரிமை கொண்டாடும் கடல் பகுதிக்குள் அமெரிக்க கடற்படை சென்று வருகிறது. 'சர்வதேச சட்டத்தின் படி, கடல் உரிமையை மீட்கும் பொருட்டு, சுதந்திர கடல் பயணம் செய்கிறோம்' என, அமெரிக்கா, அதை குறிப்பிட்டுள்ளது.
இந்தியா, சீனா, இந்தோனேஷியா, ஈரான், மலேஷியா உள்ளிட்ட, 13 நாடுகளின் கடல் பகுதிக்குள், அமெரிக்க கடற்படை, அத்துமீறி நுழைந்த தகவல், தற்போது தெரியவந்துஉள்ளது. அமெரிக்க ராணுவ தலைமையகமான, 'பென்டகன்' வெளியிட்டுள்ள, ஆய்வறிக்கையில் இது, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சீன ராணுவ அமைச்சகம், 'மற்ற நாடுகளின் கடல் பகுதியில் அத்துமீறி நுழைந்து, போர் பயிற்சியில் ஈடுபடும், அமெரிக்காவின் நடவடிக்கை ஆபத்தானது' என, கூறியுள்ளது.