இந்திய வெளியுறவுச் செயலாளர் ஜெய்சங்கருடன் தங்கள் நாட்டின் வெளியுறவுச் செயலாளர் அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக பாகிஸ்தான் அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
எனினும், இதுகுறித்த தேதி இன்னும் இறுதி செய்யப்படவில்லை என்றும் அவர் கூறியதாக பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னதாக, இரு நாடுகளின் வெளியுறவுச் செயலாளர்கள், பாகிஸ்தானில் கடந்த 15-ஆம் தேதி பேச்சுவார்த்தை நடத்துவதாகத் திட்டமிடப்பட்டிருந்தது.ஆனால், பதான்கோட் விமானப் படைத் தளத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, அந்தப் பேச்சுவார்த்தையை இரு நாடுகளும் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தன.
