ஹிந்தித் திரையுலகம் வரை முத்திரை பதித்துள்ள தனுஷ் அடுத்ததாக ஹாலிவுட்டிலும் கால்பதிக்கிறார்.
'The Extraordinary Journey Of The Fakir Who Got Trapped In An Ikea Cupboard’ என்கிற ஹாலிவுட் படத்தில் தனுஷ் நடிக்க உள்ளார். அவருடன் இணைந்து பிரபல ஹாலிவுட் நடிகையான உமா தர்மன் (UmaThurman) நடிக்கிறார். இந்தப் படத்தை மர்ஜேன் சட்ரபி (Marjane Satrapi) என்கிற பிரெஞ்சு பெண் இயக்குநர் இயக்கவுள்ளார்.
இந்தியா, பிரான்சு, இத்தாலி ஆகிய நாடுகளில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற உள்ளது. அதிகாரபூர்வமாக இத்தகவல் வெளிவந்துள்ளதால் தனுஷ் ரசிகர்கள் குஷியில் உள்ளார்கள்.
இந்தியப் படங்கள் நிறைய பார்ப்பேன். அதில் தனுஷ் தான் இந்த வேடத்துக்குப் பொருத்தமானவராக இருப்பார் என்று தோன்றியது என்று இயக்குநர் மர்ஜேன் பேட்டி அளித்துள்ளார்.

