ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா, போபண்ணா ஆகியோர் அவரவர் இரட்டையர் போட்டிகளில் வெற்றி பெற்று காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார்கள்.
மெல்போர்ன் நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இன்று நடைபெற்ற மகளிர் இரட்டையர் போட்டியில், சானியா மிர்சா - ஹிங்கிஸ் ஜோடி, 6-1, 6-3 என்ற நேர் செட்களில் ஸ்வெட்லனா - ராபர்டா வின்சி ஜோடியைத் தோற்கடித்து காலிறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
மற்றொரு (கலப்பு) இரட்டையர் ஆட்டத்தில், இந்தியாவின் ரோஹன் போபண்ணா-சீன தைபேவின் யங் ஜான் ஜோடி, 4-6, 6-3, 10-6 என்கிற செட் கணக்கில் கடுமையாகப் போராடி செக்.குடியரசின் ஆன்ட்ரியா-போலந்தின் லூகாஸ் குபோட் ஜோடியைத் தோற்கடித்து காலிறுதிக்கு முன்னேறியுள்ளது.
