
சாய் பல்லவியின் எளிமையான முகப்பருக்களுடன் இருக்கும் எதார்த்தமும் உண்மையாகவே உயர்கல்வி முடித்தவுடன் கல்லூரியில் சேர்ந்த பேராசிரியரைப் போலவே இருந்ததும்தான் படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குக் காரணம்.
அதுவும் தமிழ்க் கலாச்சாரத்துடன் ஜார்ஜிடம் மல்லிகைப் பூ வாங்கி வரச்சொல்லும் போது ரசிகர்கள் அப்படியே மயங்கித்தான் போனார்கள். சாய் பல்லவியிடம் இருந்த அந்த மென்மை சுருதியிடம் இருக்கவே இருக்காது என்கின்றனர் ஒரு தரப்பினர்.
மேலும் குடும்பப் பெண்ணாக நடித்த சாய் பல்லவி ‘பிரேமம்’ படத்தில் தடாலென குத்து டான்ஸ் ஆசிரியராகப் பாடம் எடுப்பார். அவ்வளவு நேரம் ‘பூ... புஷ்பம்’ என்று உருகியவர்களை அந்தத் திடுக்கிடும் துடுக்குத் தனம் ஆச்சரியப்பட வைத்தது. அப்படியொரு ஆச்சரியத்தை சுருதி கொடுப்பாரா என்பதும் இப்போதைக்குச் சந்தேகமே.