தமிழகம் முழுவதும், ஒன்று முதல், பிளஸ் 2 வரையிலான அனைத்து வகுப்புகளுக்கும், ஜன., 11 முதல், 27 வரை, அரையாண்டு தேர்வு நடக்கும் என, தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்து உள்ளது.
டிசம்பரில் நடக்க வேண்டிய பள்ளி அரையாண்டு தேர்வுகள், கன மழை காரணமாக, ஜனவரிக்கு தள்ளி வைக்கப்பட்டன. அதன்படி, ஜன., 11முதல், 27 வரை இத்தேர்வுகள் நடத்தப்படும் என, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன் அறிவித்து உள்ளார்.
அதன் விவரம்:
அரையாண்டு தேர்வின் இடையே, பொங்கல் பண்டிகை வருகிறது. இதில், கல்வியாண்டு காலண்டர் படி, ஜன., 15, 16, 17 ஆகிய நாட்களில், பொங்கல் பண்டிகைக்கு விடுமுறை அளிக்கப்பட்டு, 18ம் தேதி மீண்டும் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. இவ்வாறு, அவர் அறிவித்து உள்ளார்.
பிளஸ்2 தேர்வு அட்டவணை:
தேதி பாடம்
11-1-2016 தமிழ் முதல் தாள்
12-1-2016 தமிழ் இரண்டாம் தாள்
13-1-2016 ஆங்கிலம் முதல் தாள்
14-1-2016 ஆங்கிலம் இரண்டாம் தாள்
18-1-2016 வணிகவியல், மனை அறிவியல், புவியியல்
19-1-2016 கணிதம், நுண் உயிரியல், விலங்கியல்,டெக்ஸ்டைல்ஸ் டிசைனிங், உணவு மேலாண்மை, கணக்குப்பதிவியல் மற்றும் தணிக்கையியல்,குழந்தை பராமரிப்பு, வேளான் செயல் முறை, அரசியல் அறிவியல், நர்சிங்
21-1-2016 இயற்பியல், பொருளாதாரம், எலக்ட்ரிக்கல் மசின்ஸ் அன் அப்ளையன்சஸ், டெக்ஸ்டைல் டெக்னாலஜி, அலுவலக மேலாண்மை, ஆட்டோ மெக்கானிக், ஜெனரல் மசினிஸ்ட், எலக்ட்ரானிக்ஸ் எக்யூப்மென்ட், டிராட்ஸ்மென் சிவில்,
23-1-2016 வேதியியல் மற்றும் கணிதப்பதிவியல்
25-1-2016 உயிரியல், தாவரவியல், வரலாறு, வணிக கணிதம்
27-1-2016 தகவல்தொடர்பு ஆங்கிலம், இந்திய வரலாறு, கணினி அறிவியல், உயிரி வேதியல், அட்வான்ஸ்ட் தமிழ் மற்றும் புள்ளியியல்
எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு அட்டவணை:
தேதி பாடம்
11-1-2016 தமிழ் முதல் தாள்
13-1-2016 தமிழ் இரண்டாம் தாள்
18-1-2016 ஆங்கிலம் முதல் தாள்
20-1-2016 ஆங்கிலம் இரண்டாம் தாள்
22-1-2016 கணிதம்
25-1-2016 அறிவியல்
27-1-2016 சமூக அறிவியல்
10ம் வகுப்பு, பிளஸ் 2 சிறப்பு வகுப்பு உண்டு
பள்ளிக்கல்வி இயக்குனரின் அறிவிப்பின் படி, 23ம் தேதி முதல் விடுமுறை துவங்கி, ஜன., 1ம் தேதியுடன் முடிகிறது; ஜன., 2 சனிக்கிழமை, பள்ளிகள் திறக்கப்படும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2மாணவர்களுக்கு மட்டும், இந்த விடுமுறை நாட்களில், சிறப்பு வகுப்பு நடத்துவதற்கு அனுமதி உண்டு. பண்டிகை நாட்களை தவிர்த்து, மற்ற நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்தலாம் என, அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
பள்ளிகளுக்கு 10 நாள் லீவு
மிலாதுன் நபி விடுமுறை தொடர்பாக பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், நேற்று வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பள்ளிக்கல்வித் துறையின் கல்வியாண்டு காலண்டர் படி, பண்டிகை விடுமுறைகள் வழக்கம் போல் அளிக்கப்படும். அதன்படி, கிறிஸ்துமஸ், மிலாதுன் நபி மற்றும் புத்தாண்டு விடுமுறையில், மாற்றம் எதுவுமில்லை. சென்னை உள்ளிட்ட, வெள்ளம் பாதித்த நான்கு மாவட்டங்களையும் சேர்த்து, தமிழகம் முழுவதும் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து, ஜனவரியில் பள்ளிகள் திறக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இதன்படி, பள்ளிகளுக்கு, மறுபடி, 10 நாட்கள் விடுமுறை விடப்படும்.
