செவ்வாய், 1 செப்டம்பர், 2020

ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நடத்திய சட்ட விழிப்புணர்வு முகாம்

0

 


ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் தலைவர், மாவட்ட நீதிபதி உயர்மிகு.திருமதி.தீப்தி அறிவுநிதி.BA.,BL., அவர்களின் வழிகாட்டுதலின் படி,  தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு கழகத்தின் திட்ட இயக்குனர் A.ஶ்ரீநிவாசன்,BA, அவர்களின் உதவியுடன் ஈரோடு மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு நடத்திய சட்ட  விழிப்புணர்வு முகாம், ஈரோட்டில் மகளிர் மேம்பாட்டு திட்ட வளாகத்தில் உயர்மிகு. நீதிபதி S.லட்சுமி ML., (Secretary / Sub Judge -DLSA) அவர்கள் தலைமையில் நடைபெற்றது. 

விழுதுகள் தன்னார்வ  தொண்டு நிறுவனத்தின் திட்ட மேலாளர் K. சந்திரா,மற்றும் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு திட்ட  Assistant Project Officers திரு. S.முத்துக்குமாரசாமி and K.சம்பத்குமார்  ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். சமூக இடைவெளி முறைகளை பின்பற்றி நடந்த இந்த நிகழ்ச்சியில் திருமதி. S.கலைவாணி (PLV-DLSA, Erode) வரவேற்புரை ஆற்றினார். 

மேலும் பெண்களுக்கான சிறப்பு நலத்திட்டங்கள் பற்றி திருமதி.தேவகி அவர்கள் கலந்து கொண்டு பேசினார். அதன்பிறகு விழுதுகள் தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பாக 30  நலிவடைந்த மகளிர் திட்ட உறுப்பினர் குடும்பங்களுக்கு ரூ. 1000 மதிப்புள்ள அரிசி மற்றும் மளிகைப் பொருட்களை பயனாளிகளுக்கு  மதிப்பிற்குரிய துணை  நீதிபதி அம்மா அவர்கள்   வழங்கினார்.   

Mrs.T.செல்லம் அவர்கள் (Assistant Project Officer)-மகளிர் திட்டம்) நன்றியுரை வழங்கினார். விழுதுகள் ஒருங்கிணைப்பாளர் திரு.V.கோவிந்தராஜ் கலந்து கொண்டார். இறுதியாக நிகழ்ச்சி தேசிய கீதத்துடன் நிறைவுற்றது.

Author Image
பதிவிட்டவர்: Govindaraj V

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக