வெள்ளி, 3 ஜூன், 2016

கோவை தலித் மாணவி படுகொலை சம்பவம்: தாழ்த்தப்பட்டோர் நல ஆணையம் விசாரணை - மாவட்ட நிர்வாகம், காவல்துறை மீது அதிருப்தி

0
கோவையைச் சேர்ந்த தலித் மாணவி கடத்திச் செல்லப்பட்டு, திண்டுக்கல் மாவட்டத்தில் கொலை செய்யப்பட்டதில் கோவை, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகம், காவல்துறை நடவடிக்கைகள் மீது தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தின் மாநில இயக்குநர் அதிருப்தி தெரிவித்தார்.

கோவை சுல்தான்பேட்டை அருகே உள்ள கள்ளப்பாளை யத்தைச் சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மூத்த மகள் எ.சலோமியா (17). தனியார் கல்லூரியில் முத லாம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த மே 2-ம் தேதி மாயமா னார். திண்டுக்கல் மாவட்டம் தருமத்தம்பட்டி தோகமலை பகுதி யில் பாலியல் வன்கொடுமை செய் யப்பட்டு கொலை செய்யப்பட்டது கடந்த மே 5-ம் தேதி தெரியவந்தது.

இந்த வழக்கு குறித்து மாணவி யின் பெற்றோர் மற்றும் ஊர் மக்க ளிடம் தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணைய மாநில இயக்குநர் (பொறுப்பு) சந்திரபிரபா தலை மையிலான அதிகாரிகள் நேற்று விசாரணை மேற்கொண்டனர்.

ஆணையத்தின் மாநில இயக்குநர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

தலித் மாணவி காணாமல் போனது தொடர்பாக வழக்கு பதிவு செய்வதற்கு காவல்துறை அலைக்கழித்து வந்தது விசா ரணையில் தெரியவந்துள்ளது. காவல் நிலையத்துக்குள் செருப்பு அணிந்து வரக் கூடாது எனக் கூறி, புகார் கொடுக்கச் சென்றவர்களிடம் போலீஸார் கடுமையாக நடந்ததாக எங்களிடம் புகார் வந்துள்ளது. இது தொடர்பாகவும் விசாரணை நடத்தப்படும்.

விசாரணை குறித்த அறிக்கை தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்தில், வியாழக்கிழமை (இன்று) தாக்கல் செய்யப்படும். இந்த சம்பவத்தில் கோவை, திண்டுக்கல் மாவட்ட நிர்வாகங்கள் மற்றும் காவல்துறை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. இது அறிக்கையில் குறிப்பிடப்படும்.

இவ்வழக்கு தொடர்பாக சிங்காநல்லூர், சூலூர் மற்றும் கன்னிவாடி காவல்நிலையத்தில் முறையான விசாரணை நடத்தவும், மாணவியின் குடும்பத்தினரில் ஒருவருக்கு வேலை வழங்குமாறு தேசிய தாழ்த்தப்பட்டோர் நல ஆணையத்திடம் பரிந்துரை செய்யப்படும் என்றார்.
Author Image
பதிவிட்டவர்: Anand

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக