செவ்வாய், 31 மே, 2016

பிரச்சனைக்கு போர் ஒரு தீர்வு இல்லை: பாகிஸ்தான் தூதர் அப்துல் பஸித்

0
இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைக்கு போர் ஒரு தீர்வு இல்லை என்று பாகிஸ்தான் தூதர் அப்துல் பஸித் தெரிவித்துள்ளார்.

இன்று டெல்லியில் நடைப்பெற்ற கருத்தரங்கில் பேசிய பாகிஸ்தான் தூதர் அப்துல் பஸித் “ இந்தியா-பாகிஸ்தான் பிரச்சனைக்கு போர் ஒரு தீர்வு இல்லை. முட்டாள்கள் தான் மோதல் மூலம் தீர்வு கிடைக்கும் என்று நினைப்பார்கள். நாம் அமர்ந்து பிரச்சனை குறித்து ஆலோசிக்காத வரையில் தீர்வை எட்ட முடியாது.

பதான்கோட் விவாகரத்தில் நாங்கள் நல்ல ஒத்துழைப்பு வழங்கிவருகிறோம். இந்த பிரச்சனையின் வேர் வரை செல்ல முடியும் என்று நம்புகிறேன். சுஷ்மா சுவராஜ் மற்றும் பிரதமர் மோடி ஆகியோர் பாகிஸ்தானுக்கு பயணம் மேற்கொண்டார்கள். இரு நாட்டிலும் அமைதி நிலவியது. ஆனால் துரதிருஷ்டவசமாக பதான்கோட் தாக்குதல் நடந்தது, இதனால் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் நடக்காமல் போய்விட்டது.” என்று அவர் தெரிவித்தார்.

மேலும் விரைவில் இரு நாடுகளுக்கு இடையே பேச்சுவார்த்தை தொடக்கும் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக