தமிழகம் உள்ளிட்ட 15 மாநிலங்களில் இருந்து வரும் ஜூன் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் மொத்தம் 57 உறுப்பினர்களுக்கான மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவி காலாவதியாக உள்ளது. இப்பதவிகளை நிரப்புவதற்கு ஜூன் 11-ம் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது.
தமிழகத்தில் அ.தி.மு.க.வின் நவநீத கிருஷ்ணன், ரபி பெர்னார்ட் மற்றும் பால் மனோஜ் பாண்டியன், காங்கிரசின் சுதர்சன நாச்சியப்பன், தி.மு.க.வின் கே.பி.ராமலிங்கம் மற்றும் எஸ்.தங்கவேலு ஆகிய 6 எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடைய உள்ளது. இந்த பதவிகளுக்கு புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் தமிழக சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்க உள்ளனர்.
இந்த தேர்தல் குறித்து தமிழக தலைமை தேர்தல் அதிகாரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:.
தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஆறு மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் 29.06.2016 முடிவடைவதைத் தொடர்ந்து ஏற்படும் காலி இடங்களை நிரப்புவதற்காக, இந்தியத் தேர்தல் ஆணையம் தேர்தல் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.
அதன்படி, தேர்தல் அறிவிக்கை 24-5-2016 அன்று (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்பட்டு, அன்றே வேட்பு மனு தாக்கல் ஆரம்பம் ஆகிறது. வேட்பு மனுக்களை தாக்கல் செய்வதற்கு 31-ம் தேதி கடைசி நாளாகும். 1-6-2016 அன்று வேட்பு மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். மனுக்களை வாபஸ் பெறுவதற்கு கடைசி நாள் 3-6-2016 ஆகும். அதன்பின்னர் தேவைப்பட்டால் 11-6-2016 அன்று வாக்குப்பதிவு நடத்தப்படும். காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, அன்றே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். 13-6-2016 அன்று தேர்தல் நடவடிக்கைகள் முடிவுறும்.
இந்தியத் தேர்தல் ஆணையம் தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் செயலாளரை தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைச் செயலகத்தின் துணைச் செயலாளரை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரியாகவும் நியமனம் செய்துள்ளது.
வேட்பு மனுக்களை பிற ஆவணங்களுடன் தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ அல்லது உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முன்போ தலைமைச் செயலகத்திலுள்ள அவர்களது அலுவலகத்தில் 24.05.2016 முதல் 31.05.2016 வரை காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை, 1881ஆம் வருட செலாவணி முறிச்சட்டத்தின்கீழ் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ள 29.05.2016 (ஞாயிற்றுக்கிழமை) தவிர, பிற நாட்களில் தாக்கல் செய்யலாம். வாக்குப்பதிவு, தேவைப்படின், சட்டமன்ற குழுக்கள் அறையில் நடைபெறும்.