வியாழன், 14 ஏப்ரல், 2016

சோம்பேறித்தனம்

0
நடிகைக்கு பெட் காபி கொடுத்து விட்டு 
வேலைக்காரி எழுப்பினாள்; 
அம்மா காபி சாப்பிடுங்க, எக்சைஸ் பண்ணனும் எந்திரிங்க, சீக்கிரம். 

நடிகையோ அதட்டலைக்கண்டு அலுப்புடன் சலித்துக்கொண்டாள். 
"போடி எதுக்கு இவ்வளவு சீக்கிரம் எழுப்புறே? இன்னும் கொஞ்சம் நேரம் தூங்கறேன். 

"அம்மா காபி ஆறிடும்?" 

"பரவாயில்ல, நீ குடிச்சுக்க. எனக்கு காபி வேணாம். கம்முனு போ.!" 

வேலைக்காரி மெதுவாக நகர்ந்தாள்.. 
அவளே இன்னைக்கு வேலைக்கு வரும் போது லேட்டாகத்தான் வந்தாள், 

சோம்பேறித்தனம் எவ்வளவு சௌகரியம் தருகிறது, அவளுக்கு புரியாமலில்லை..


Author Image
பதிவிட்டவர்: Govindaraj V

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக