ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து பி.எஸ்.எல்.வி. சி33 ராக்கெட் ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஜி செயற்கைக்கோள் வியாழக்கிழமை பகல் 12.50 மணிக்கு விண்ணில் ஏவப்படவுள்ளது.
இதற்கான 51 மணி நேரம் 30 நிமிஷங்கள் கவுன்ட் டவுன் செவ்வாய்க்கிழமை காலை 9.20 மணிக்குத் தொடங்கியது.
பேரிடர் காலங்களில் கடல், வான் போக்குவரத்து பாதையைத் துல்லியமாக கணக்கிடுவதற்காகவும், தகவல் தொழில்நுட்ப மேம்பாடு, ராணுவம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தவும் வகையில் 7 வழிகாட்டி செயற்கைக்கோள்களை விண்ணுக்கு அனுப்ப 2013-ஆம் ஆண்டு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) திட்டமிட்டது.
இதன்படி, 2013 ஜூலையில் தொடங்கி கடந்த மார்ச் வரை ஐ.ஆர்.என்.எஸ்.எஸ், - 1ஏ, 1பி, 1சி, 1டி, 1ஈ, 1எப் என 6 செயற்கைக்கோள்கள் ஏற்கெனவே பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள் மூலம் விண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளன. இப்போது ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1ஜி என்ற 7 ஆவது செயற்கைக்கோளை பி.எஸ்.எல்.வி. சி-33 ராக்கெட் மூலம் வியாழக்கிழமை நண்பகல் 12.50 மணிக்கு ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டா முதலாவது ஏவுதளத்திலிருந்து விண்ணில் செலுத்த இஸ்ரோ முடிவு செய்துள்ளது.
செயற்கைக்கோள்: இப்போது அனுப்பப்படவுள்ள ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். - 1ஜி செயற்கைக்கோளில் அதிநவீன சோலார் பேனல்கள், பேட்டரி, சென்சார் கருவிகள், எல்5-பேண்ட் மற்றும் எஸ்-பேண்ட் உள்பட அதிநவீன மோட்டார்களும் பொருத்தப்பட்டுள்ளன. இவை செயற்கைக்கோளின் செயல்பாடுகளைத் துல்லியமாகக் கணிக்க கூடிய அளவில் பொருத்தப்பட்டுள்ளது.
பிஎஸ்எல்வி வரிசையில் 35-ஆவது ராக்கெட்: அதிநவீன எக்ùஸல் வகையில் இது 13- ஆவது ராக்கெட். இதற்கு முன்பு சந்திராயன், ஜிசாட்-12, ரிசாட்-1, ஐ.ஆர்.என்.எஸ்.எஸ். 1-ஏ, 1பி, 1சி, 1டி, 1ஈ, 1எப், மங்கள்யான், அஸ்ட்ரோசாட் டிஎம்சி மிஷன்கள் (2) என 12 செயற்கைக்கோள்கள் அனுப்பப்பட்டுள்ளன. இப்போது அனுப்பப்பட உள்ள செயற்கைக்கோளின் மொத்த எடை 1425 கிலோ. இதன் ஆயுள்காலம் 12 ஆண்டுகள். இந்த செயற்கைக்கோளை பூமியிலிருந்து 20,657 கிலோ மீட்டர் உயரத்தில் நிலை நிறுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக இஸ்ரோ தெரிவித்துள்ளது.