வெள்ளி, 4 டிசம்பர், 2015

மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உணவு வழங்கினார் இசையமைப்பாளர் இளையராஜா

0


சென்னையில் வெள்ளத்தில் சிக்கியுள்ள லிட்டில் பிளவர் பள்ளியைச் சேர்ந்த பார்வையற்ற, வாய் பேச முடியாத - காது கேளாத குழந்தைகளை சந்தித்து உணவு அளித்து ஆறுதல் கூறியுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. வரலாறு காணாத கனமழையால் சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது. சென்னையில் சிக்கித் தவிக்கும் சொந்த பந்தங்களை நினைத்து வெளியூர்களில் வசிக்கும் மக்கள் கண்ணீரும், கம்பலையுமாக உள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள மக்களை ராணுவத்தினர் மீட்டு வருகிறார்கள். பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு சக மக்களும் உதவி செய்து வருகிறார்கள். இந்நிலையில் சென்னை அண்ணா சாலையில் அண்ணா மேம்பாலம் அருகே உள்ள பார்வையற்ற, வாய் பேச முடியாத-காது கேளாத குழந்தைகளுக்கான லிட்டில் பிளவர் பள்ளியில் 250 குழந்தைகள் சிக்கி பசியுடன் தவிப்பதாக செய்தி வெளியானது.


Author Image
பதிவிட்டவர்: Govindaraj V

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக