நாட்டில் ரூபாய் நோட்டுக்களின் பயன்பாட்டை குறைக்க கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
மேலும் இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை வரும் 29ம் தேதிக்குள் தெரிவிக்கலாம் என்றும் கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டு மூலம் குறிப்பிட்ட அளவுக்கு பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்கப்படும்.
ரயில் டிக்கெட், பெட்ரோல் விற்பனை நிலையம், சமையல் எரிவாயு ஏஜென்சி ஆகியவற்றில் பணம் செலுத்த கிரெடிட் கார்டு மற்றும் டெபிட் கார்டை பயன்படுத்துபவர்களுக்கு பரிவர்த்தனை கட்டணம் வசூலிக்கப்படாது. என்றும் அறிவித்துள்ளது.
இதுபோல், ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளை கார்டு மூலம் மேற்கொள்வது கட்டாயம் ஆக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிகிறது.
நன்றி - தினமணி
