பயோ டீசலை நுகர்வோருக்கு நேரடியாக விற்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. பயோ டீசலை உற்பத்தி செய்பவர்கள், வினியோகம் செய்பவர்கள் அவற்றை நேரடியாக நுகர்வோருக்கு விற்பனை செய்ய மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது என்று மத்திய மின்சாரம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித்துறை அமைச்சர் பியஷ் கோயல் நாடாளுமன்றத்தில் பேசுகையில் தெரிவித்தார். நாடு முழுவதும் பயோ டீசலின் பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் மத்திய அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பயோ டீசல் துறையை மேம்படுத்தவும், ஆய்வு மற்றும் அபிவிருத்தி செய்யவும் அரசு ஊக்குவிக்கும் என்றும் அமைச்சர் கோயல் சுட்டிகாட்டினார்.
