கூகுள் குதித்தால், பேஸ்புக் பேசாமல் இருக்குமா? கடந்த வாரம் இந்தியாவில் பலூன் மூலம் இணைய சேவை தர ஆர்வமாக இருப்பதாக கூகுள் அறிவித்தது. அதையடுத்து பேஸ்புக்கும் விமானங்கள் மூலம் இணைய சேவை தரம் சோதனை முயற்சியை இந்தியாவிலும் செய்ய திட்டம் இருப்பதாக அறிவித்திருக்கிறது 'இந்தியாவில் இணையத்தின் மூலம் இணையாதவர்கள் அதிகம் என்பதால் இங்கிருக்கும் வாய்ப்புகளை நிச்சயம் நாங்கள் பரிசீலித்து வருகிறோம்' என்று பேஸ்புக்கின் இன்டர்நெட்.ஆர்க் பிரிவின் துணைத் தலைவரான கிறிஸ் டேனியல்ஸ் தெரிவித்திருக்கிறார்.
சூரிய ஒளியின் மூலம் தயாரிக்கப்படும் மின்சாரத்தால் வானில் பறக்கும் விமானங்கள் மூலம் பூமியில் இருப்பவர்களுக்கு இணைய சேவையை வழங்குவதுதான் பேஸ்புக்கின் திட்டம். பிரதமர் நரேந்திர மோடி இணைய சேவை எல்லாருக்கும் இந்தியாவில் கிடைக்கவேண்டும் என்று பேசி வருவது பேஸ்புக் நிறுவனர் மார்க் சக்கர்பர்க்கை மிகவும் கவர்ந்திருக்கிறது. ஏற்கனவே தனது இன்டர்நெட்.ஆர்க் மூலம் ஐதராபாத்தில் சேவையை இந்தியாவில் பேஸ்புக் துவங்கியிருக்கிறது.
