செவ்வாய், 17 மார்ச், 2015

இதுவரை 70 கோடி ஐபோன்கள் விற்பனை

0
அண்மையில் சான் பிரான்ஸிஸ்கோ நகரில் நடைபெற்ற ஆப்பிள் நிறுவனத்தின் ”வசந்தம் நோக்கி” என்ற விழாவில், இந்நிறுவனத் தலைவர் டிக் குக் பேசுகையில், இதுவரை உலகெங்கும் 70 கோடி ஐபோன்கள் விற்பனையாகியுள்ளதாகத் தெரிவித்துள்ளார். ஏழு ஆண்டுகளுக்கு முன்பு முதல் ஐபோன் விற்பனைக்கு வந்தது. ஏழு ஆண்டுகளில் இந்த சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஒராண்டுக்கு முன் ஆப்பிள் ஐபோன் விற்பனை 50 கோடியைத் தாண்டி இருந்தது. கடந்த ஓராண்டில், ஐபோன் விற்பனை இலக்குகளை மீறியதாக இருந்துள்ளது. இதற்குக் காரணம் சென்ற ஆண்டில் அறிமுகமான ஐபோன் 6 மற்றும் ஐபோன் 6 ப்ளஸ் தான் காரணம். சென்ற ஆண்டின், இறுதி மூன்று மாதங்களில் மட்டும், ஆப்பிள் 7 கோடியே 50 லட்சம் போன்களை விற்பனை செய்தது. 
உலக அளவில், ஸ்மார்ட் போன் விற்பனை வேகத்தைக் காட்டிலும், ஐபோன் விற்பனை பல மடங்கு உயர்வாக இருந்ததாக, டிம் குக் தெரிவித்துள்ளார். மற்ற போன்களின் விற்பனை உயர்வு 26% ஆக இருந்த போது, ஆப்பிள் போன்களின் விற்பனை உயர்வு 49% ஆக இருந்தது. இதே வேகத்தில் சென்றால், நூறு கோடி ஐபோன் விற்பனை என்ற இலக்கினை எட்டிட, வெகு காலம் ஆகாது என ஆப்பிள் நிறுவனம் எண்ணுகிறது.
Author Image
பதிவிட்டவர்: Manoj

செய்தி ஆசிரியர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக